விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே லாரி, அரசுப்பேருந்து, கார் ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவர் லாரியில் காட்டன் பேல்களை ஏற்றிக்கொண்டு சென்னை மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி வளைவில் திரும்புவதற்காக திடீரென வேகத்தை குறைத்தால், மோகன் குமாரும் திடீரென லாரியை நிறுத்தினார். இதனால் லாரியின் பின்னால் வந்த அரசு பேருந்து மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து மற்றும் காரின் முன்பகுதி உருக்குலைந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.