கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 செல்போன்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர்கள் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.