கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிளியம்மன் அய்யனார் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிளியூர் கிராமத்தில் உள்ள இக்கோவிலில் பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவின் ஒரு பகுதியாக கிளியம்மனை தாய் வீட்டிலிருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாய் வீடான ரகுநாதபுரத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட கிளியம்மன், அதிர்வேட்டு, வான வேடிக்கை, மேளதாளத்துடன் ஊர்வலமாக கிளியூர் எல்லையை வந்தடைந்தபோது, குதிரை பல்லக்கில் எழுந்தருளிய அய்யனார், கிளியம்மனை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.இதனை தொடர்ந்து இரு சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.