நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வெண்ணந்தூர் அடுத்த சௌரிபாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவர் சுண்டக்கா என்கிற ராஜி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 மற்றும் 12 வயது சிறுமிகள் இருவரை தனியாக அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.