கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாய் பணம் சிக்கியது.சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கிய நிலையில், இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் என்பவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.