பகலை இரவு ஆகும் கடும் பனிமூட்டத்தால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் சாலை தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்ட நிலவுவதால் வாகன ஒட்டிகள் முகப்பு விளக்கு ஏறிவிட்ட வண்ணம் செல்கின்றனர் ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஏற்காடு : ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து அதிகளவில் மக்கள் வந்து, ஏற்காட்டில் தங்கியிருந்து இயற்கையை ரசிக்கின்றனர். ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணநிலை நிலவுகிறது. இருந்த போதிலும் சுற்றுலா பயணிகளின் வருகை . இன்று குறைந்த அளவை காணப்படுகிறது வந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம் இன்று காலை முதலே மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது போல், பனிமூட்டம் இருந்தது. ஏரி பகுதியில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. இதனால், அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர் ஏற்காடு மலைப்பகுதியில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது பொருத்தியது போல் உள்ளது இது சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.