திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரியாணிக்காக சண்டையிட்ட உடன்பிறப்புகளுக்கு இடையே தள்ளுமுள்ளு.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டம் தொடங்கியது முதலே கூச்சல் குழப்பமாக நடைபெற்று வந்த நிலையில் நிகழ்வின் நிறைவாக நடைபெற்ற உணவு உபசரிக்கும் இடத்தில் திமுகவினர் இரு பிரிவுகளாகப் பிரிந்து பிரியாணி தட்டுப்பாடு உள்ளதாகவும் அஞ்சாயிரம் பேருக்கு பிரியாணி கொடுக்கிறதா சொல்லி குஸ்காவா கொடுக்குறீங்க என காட்டமாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளாக மாறியது. மோதல் வெடிக்கவே அங்கு வந்த செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை கண்டு சுதரித்துக்கொண்ட திமுக நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் உணவு பரிமாறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தகராறில் ஈடுபட்டு வந்த நிர்வாகிகளை எச்சரித்து பின்னர் சமரசம் செய்தார். கும்மிடிப்பூண்டி திமுகவினர் இடையே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழும்பி வருவது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேச பொருளாக மாறி உள்ளது.