மானாமதுரை அருகே மர்மமான முறையில் இளைஞர் வெட்டி கொலை, குற்றவாளிகளை கைது செய்ய கோரி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதங்களில் நடைபெற்ற தொடர் கொலை சம்பவங்களை அடுத்து போலீசார் இரண்டுக்கும் மேற்பட்டவர்களை சுட்டுப் பிடித்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் 20 வயது மதிக்கத்தக்க பிரவீன் ராஜ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார். இளைஞர் கொலை செய்த சம்பவம் மீண்டும் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்யக் வலியுறுத்தி இறந்த இளைஞரின் உறவினர்கள் 200க்கும் அதிகமானவர்கள் தற்போது நான்கு வழிச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.