திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே,கார் மரத்தில் மோதிய விபத்தில் மாமியார் மற்றும் மருமகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. காங்கேயத்தைச் சேர்ந்த மதிவாணன், தனது மனைவி ராகவி , ஒரு வயது குழந்தை ஆதிக் மற்றும் தாய் பாக்கியலட்சுமியுடன், மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு காங்கேயத்திலிருந்து தாராபுரம் நோக்கி காரில் சென்றதாக கூறப்படுகிறது. கார் இச்சிப்பட்டி அருகேயுள்ள குட்டையகாடு பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் ராகவி மற்றும் பாக்கியலட்சுமி உயிரிழந்த நிலையில், மதிவாணனும், குழந்தை ஆதிக்கும் படுகாயம் அடைந்தனர்.