சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை சேர்ந்த சுடலை ஆடு மேய்க்கும் தொழிலாளி நேற்று ஆழ்வார் திருநகரி அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உரிய நிவாரணம் வழங்க கோரி திருச்செந்தூர் சாத்தான்குளம் பிரதான சாலையில் சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம்...தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமாங்குளம் வயல்வெளியில் பட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்த செம்மறி ஆடுகளை பராமரிப்பதற்காக மணிகண்டன் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார்.இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆடுகள் வளர்க்கும் இடத்தில் வைத்து ஆடுகளை பராமரிக்கும் மணிகண்டனுக்கும் தேமாங்குளம் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் மணிகண்டன் இல்லாததால் சுடலை ஆடுகளை நேற்று இரவு வயல்வெளியில் பட்டியில் அடைத்து விட்டு அதன் அருகே கட்டில் போட்டு படுத்து தூங்கி உள்ளார்.காலையில் நீண்ட நேரம் ஆகியும் சுடலை எழும்பவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்றவர்கள் கட்டிலில் மூடியிருந்த போர்வையை எடுத்து பார்த்த போது சுடலை முகத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்து நிலையில் அவர் சொந்த ஊரான பன்னம்பாறையில் அவரது உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் சாத்தான்குளம் திருச்செந்தூர் பிரதான சாலையில் அவரது உடலை வாங்க மறுத்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சம்பவ இடத்தில் சாத்தான்களும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்து வருகிறது...