திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட பேரளம் அருகே திருமீயச்சூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் வயது 52 இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார் இந்த நிலையில் நேற்று திருமீயச்சூர் பகுதியில் வீட்டிற்கு அருகே ஆடுகளை அருகில் உள்ள வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த பொழுது டாட்டா சுமோவில் வந்த மர்ம நபர்கள் ஆடுகளை ஏற்றியுள்ளனர் இதை அறிந்த அப்பகுதி மக்கள் பேரளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாட்டா சுமோ வாகனத்தை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் டாட்டா சுமோ வாகனத்தில் ஆடுகள் மற்றும் அதனை கடத்தி வந்த குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் வயது 29 சோலைகுமரன் வயது 26 வீர மணிகண்டன் வயது 23 ராஜசேகரன் வயது 40 திருச்சி பகுதியைச் சேர்ந்த லோக ராம் வயது 21 ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.