தமிழகத்தில் மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்ற குரல் நாளுக்கு நாள் ஒங்கி ஒலித்து கொண்டிக்கும் நிலையில் தேனி அருகேயுள்ள மதுக்கடையை அகற்றினால் மதுபிரியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றும், வேதனையில் கொந்தளிக்கின்றனர் பெரியகுளம் பகுதி மதுப்பிரியர்கள் எதற்காக இந்த கொந்தளிப்பு என்னதான் பிரச்சனை இந்த மதுக்கடையில் என்பதை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைகுளம் பகுதி அதிகளவு விவசாய செய்யும் பகுதி ஆகும், இந்த விவசாயத்தை நம்பியே விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் உள்ளனர் இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விவசாய பாசனத்திற்கு நிலத்தில் தீடிரென அரசு மதுபான கடை .திறக்கபட்டது விவசாய பாசனம் நடைபெறும் இடத்தில் திறக்கபட்டதால் இந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் இந்த மதுபான கடை அமைந்துள்ள பகுதி அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பதால் மதுபான கடைக்கு செல்பவர்களும், சென்று திரும்புபவர்களும் சாலையில் வரும் வாகனங்களை கவனிக்க முடியாத நிலையில் கடைக்கு செல்லும் பாதை அமைந்து உள்ளது இந்த சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கனக்கான வாகனங்கள் வந்து செல்லும் மேலும் இந்த பகுதியில் உள்ள ஏரளமானவர்கள் பெரியகுளம் செல்ல இந்த சாலையினை பயன்படுத்துவது வழக்கம் இத்தைய சூழலில் இந்த பகுதியில் அரசு மதுக்கடை அமைத்திருப்பது இந்த பகுதி மக்களையும், விவசாயிகளையும் கடும் அதிர்ச்சி அடைய செய்திருப்பதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் இந்த மதுக்கடை விதிமுறைகளை மீறி விவசாய பகுதியில் அமைந்திருப்பதும், இந்த மதுக்கடையினால் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாக கூறி பெண்கள் அமைப்பினர் மற்றும் தமிழ் புலிகள் அமைப்பினர் கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடையை அகற்ற கோரினார்கள் இந்த நிலையில் இந்த பகுதியில் தான் மதுக்கடை அமைய வேண்டும், பெரியகுளம் பகுதியில் மதுக்கடை இல்லாத காரனத்தினால் கூடுதலாக பணம் செலுத்தி தனியார் பார்களில் மது குடிப்பதாகவும், இதனால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மதுக்கடையிலேயே செலவு செய்யும் சூழல் உருவாகி வருவதாகவும், இந்த மதுக்கடையினை அகற்ற முடிவு செய்தால் மதுப்பிரியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பெரிய குண்டை துக்கி போட்டார் ம்துப்பிரிய ஒருவர் இந்த நிலையில் மதுக்கடை குறித்து நாம் செய்தி எடுப்பதை கண்ட அரசு டாஸ்மாக் கடை ஊழியர் மதுப்பிரியர்களை துண்டி விட்டு இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க வேண்டும் என பேட்டி அளிக்குமாறு மதுப்பிரியர்களை துண்டி விட்டு அவர்களை நம்மிடம் பேட்டி அளிக்க வைத்தார் இந்த பகுதி மக்களின் வாழ்வாதரமாக விளக்கும் விவசாய நிலத்திலும் , அடிக்கடி விபத்து ஏற்படும் இந்த இடத்தில் அமைக்கபட்ட மதுபான கடையினை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது