திருப்புவனம் பகுதியில் இரண்டு காளைகள் சாலைகளில் ஆக்ரோஷமாக சண்டை போட்டு அருகில் உள்ள கடைகளை சேதப்படுத்தும் வீடியோ காட்சிகள் வைரல்சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் காளைகள் அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வதும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்துக்களை ஏற்படுத்துவதும், கடைகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது, இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுக்கும் காளைகளை பிடித்து கோசலைகளுக்குள் அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது, அதேபோல் இரண்டு காளைகள் ஆக்ரோசமாக சாலைகளில் முட்டி சண்டை போட்டுக் கொண்டநிலையில் தடுப்பதற்கு அருகில் இருந்த ஒருவர் அதை எவ்வளவோ அடித்தும் சண்டையை தடுத்து நிறுத்த முற்பட்ட நிலையில் இரண்டு காளைகள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அருகில் உள்ள கடைகளை சேதப்படுத்தியது இதில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை திருப்புவனம் பகுதியில் இதுபோல் சாலைகளில் சுற்றி திரியும் காளைகள் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் இது தெரிந்தும் பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மாவட்ட நிர்வாகம் இதை உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.