தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து உள்ள புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் புளியங்குடி காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டுறையின் அவசர உதவி எண்ணிற்கு திடீரென போன் செய்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் எதற்காக இவர் புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார் என காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.....