குன்னூர் நான்சச் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு இரண்டு கரடிகள் புகுந்து அட்டகாசம். கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் அட்டகாசம் செய்து வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடந்த வனப்பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நான்சச் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் கடந்த சில மாதங்களாகவே கரடிகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்து கதவுகளை உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை சேதப்படுத்துவது வழக்கமாகவே உள்ளது இது தொடர்பாக பலமுறை வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கூறியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை மேலும் கரடியினால் பெரும் அசவாவிடம் ஏற்படும் இந்தப் பகுதியில் சுற்றித் திரயும் கரடிகளுக்கு வனத்துறையினர் குண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.