கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் வினாடிக்கு 500 கன அடி மேல் உபரி நீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதை ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருவதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திருப்பரப்பு அருவியில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 5-வது நாளாக தொடரும் தடை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் நிலவி வந்த நிலையில் அணைகளிலும், ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டு வந்த நிலையில்தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் 48-அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவான 42-அடியை தாண்டி தற்போது 44.93 அடியை எட்டிய நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 579 கன அடி மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை காரணமாக கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் திருப்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு திருப்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க இன்று 5-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.