திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா ஆகஸ்ட் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில், விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடனும், வள்ளியம்மன் தனித்தனி தேரிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.