சாதிய பிரச்சனையில், பெண் பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீயை பணியிட மாற்றம் செய்திட கோரி கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் மாதவி அறிவிப்பு …… கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ, கடந்த மாதம் 18ம் தேதி வகுப்பறையில், மாணவ, மாணவியர்களிடம் சாதிய ரீதியாக பேசி அவமதித்ததால் அவரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் நேற்று 06வது நாளாக தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்ததுடன், கல்லூரி வாயில் முன்பு முற்றுகையிட்டு அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீயை இங்கிருந்து பணியிட மாறுதல் செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்குழு மாணவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் மாதவி அறிவித்துள்ளார்