சென்னை மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்து பயன்படுத்தி வரும் வாசகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அரசின் சார்பில் வருடம் தோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போர், dlo chennnai @ gmail.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் நபருக்கு மூவாயிரம் ரூபாய் மதிப்பில் கேடயமும் பாராட்டு சான்றிதழும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட உள்ளது.