திருவள்ளூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது : தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்ட நிலையில் லாரி முழுவதும் எரிந்து எலும்பக்கூடானது.திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து l வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி புறப்பட்ட லாரியானது திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சாலையின் வளைவில் சென்றபோது தாழ்வாக இருந்த மின் கம்பி வைக்கோல் மீது உரசியதில் வெயிலின் தாக்கத்தினால் காய்ந்து கிடந்த வைக்கோல் தீ பற்றி தெரிந்துள்ளது. இதனைக் கண்ட லாரியின் ஓட்டுனர் லாரியை விட்டு இறங்கி உயிர் தப்பிய நிலையில் தீ முழுவதுமாக பரவி லாரி முழுவதும் தீப்பற்றி தெரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து வருகிறது.மேலும் விசாரணையில் அளவுக்கு அதிகமாக லாரியில் வைக்கோல் ஏற்றியதும் திருப்பாச்சூர் பல்வேறு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளில் ஒன்று உரசியதும் வைக்கோல் தீப்பிடிக்க காரணம் எனவும் தெரியவந்துள்ளது.