பள்ளி மாணவனை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த ரவுடிகள். கை உடைந்து நிலையில் கைது செய்த போலீசார் கோவை மாவட்டம் சூலூர் அருகே டியூஷனுக்கு சென்று விட்டு வந்த பள்ளி மாணவனிடம் கத்தியால் வெட்டி செல்போன் பறித்த ரவுடிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சூலூர் அருகே உள்ள நடுப்பாளையம் பிரிவு பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் அவரது மகன் தர்ஷன் வயது 14. தர்ஷன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வியாழன் அன்று தர்ஷன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் டியூஷன் படிக்க சென்றுள்ளார். டியூஷன் முடிந்து இரவு 7 மணி அளவில் வீடு திரும்பிட்டு கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் இருட்டில் மறைந்து கொண்டு பேர் இருந்த மூன்று பேர் தர்ஷனை வழிமறித்து அவரிடம் இருந்து செல்போனை தரும்படி மிரட்டி உள்ளனர் .தர்ஷன் செல்போனை கொடுக்க மறுக்கவே கும்பலில் இருந்து ஒருவன் தான் தயாராக வைத்திருந்த கத்தியால் தர்ஷனின் மண்டையில் ஓங்கி குத்தியுள்ளார. இதில் பலத்தை ரத்த காயம் அடைந்த தர்ஷன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அதே வேளையில் வெகுநேரமாகியும் தர்ஷனை காணாததால் அவரது தாய் தனது மகனை தேடி டியூஷன் சென்டர் நோக்கி வந்துள்ளார் .அப்போது நடுப்ப பாளையம் பிரிவு பகுதியில் தர்ஷன் மயங்கிய நிலையில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் கீழே கடந்துள்ளார் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுவன் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை ராஜேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவர்களுடன் செல்போன் பறிக்கும் என்று கத்தியால் வெட்டிய கும்பலை தேடி வந்தனர். நடுப்பாளையம் பிரிவில் சூலூர் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்த போலீசார் சந்தேகத்துக்கிடமான வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் பாப்பம்பட்டி பகுதியில் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரும் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சூலூர் போலீசார் அந்த பகுதியில் சுற்றி வளைத்து குற்றவாளிகளை பிடிக்க முயன்றனர் அங்கிருந்த பாப்பம்பட்டியை சேர்ந்த ஐயப்பன் 19 தமிழ்ச்செல்வன் 22 ஆகியோர் போலீசாரிடம் வசமாக சிக்கிய நிலையில் வாலிபர் ஒருவர் மட்டும் பிடிக்கு சென்ற போலீஸிடம் இருந்து தப்பி போடியுள்ளார் .அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தில் எட்டி குதித்து தப்பிக்க முயன்ற போது அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். போலீசார் பிடித்த போது அவருக்கு இடது கை உடைந்து தொங்கி கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை சேர்த்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கண்ணன் வயது 22 என்பதும் மாணவனை வெட்டிய மூன்று பேர் கும்பலில் கண்ணன் முக்கியமான ரவுடி எனவும் இவர்தான் மாணவனை தலையில் வெட்டியவர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது அதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த கண்ணனை கைது செய்த போலீசார் பள்ளி மாணவனை கத்தியால் வெட்டியதாக ஐயப்பன் தமிழ்ச்செல்வன் கண்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்