நத்தம் அருகே கோர விபத்து சம்பவ இடத்திலேயே சிறுவன் உட்பட ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலையில்புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் என்னும் இடத்தில் நத்தத்தில் இருந்து அழகர்கோவில்-க்கு இயங்கும் அழகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் CBSE பள்ளிக்கு சொந்தமான பேருந்த்தில் 50 மாணவர்களை ஏற்றி கொண்டு நத்தம் அண்ணாநகரை சேர்ந்த தன்ராஜ் என்பவர் ஒட்டி சென்று கொண்டிருந்த போது முடக்கு சாலை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வந்து கொண்டிருந்தன அந்த இருசக்கர வாகனத்தை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலத்தைச் சேர்ந்த முருகன் (40 வயது) ஓட்டிவர அவரது மனைவி பஞ்சு, மகன் ஸ்ரீதர்(6) உடன் வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தை ராங் ரூட்டில் ஒட்டி வந்து பஸ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முருகன் அவரது மனைவி பஞ்சு மகன் ஶ்ரீதர் ஆகியோர் உயிரிழந்தர்கள். உடலை கைப்பற்றிய நத்தம் போலீசார் நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்து விபத்து குறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்,பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.