மூத்த குடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி முதியோரை கனிவுடன் பராமரித்தல் குறித்து வாக்கத்தான் நடைபெற்றது முதியோர்களின் நல வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்தை முன்னிலைப்படுத்து விதமாக வாரியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் முதியோரை கனிவுடன் பராமரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் வாக்கத்தான் நடைபெற்றது.இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை அதுல்யா சீனியர் கேர் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அலுவலருமான சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகள் ஏந்தி முதியோர்களுக்காக ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி வந்தனர்.இந்த வாக்கத்தானது கோவையில் மட்டும் இல்லாமல் பெங்களூர், சென்னை ஆகிய பகுதிகளிலும் அதுல்யா சீனியர் கேரின் சார்பாக நடைபெற்றது.