சிவாஜி கணேசன் மற்றும் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தேவர் மகன் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தை மறுவெளியீடு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக, 4K தர மேம்பாடும் டப்பிங் பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது. மேலும் திரைப்படத்திற்கான புதிய இசைக்கோர்ப்பு பணிகளை இளையராஜா மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.