லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், இதனால் தனது சம்பளம் இரு மடங்காக உயர்ந்ததாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். கூலி படத்திற்காக தனக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், கூலி படம் ரூ. 1,000 கோடி வசூலிக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், படத்தை பார்க்க மக்கள் கொடுக்கும் டிக்கெட் விலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும் கூறினார்.