நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக, ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். நேஷனல் ஜியாகிராஃபிக்கின் புதிய தொடரான 'போல் டு போல்' பிரீமியர் நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற அவர், சிவப்பு கம்பள வரவேற்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த காலத்தில் சல்மான் கான், அமிதாப் பச்சனுடன் கூட இணைந்து நடிப்பது குறித்து பேசியதாக தெரிவித்தார்.