அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகும் திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.