Also Watch
Read this
வேட்டையனில் அப்படி என்ன ஸ்பெஷல்? தனித்தீவு வாங்கிய நடிகை ஏகேவுடன்.. மோதப் போவது இவரா?
7 படங்கள்இந்த வாரம் வெளியாகும் 7 படங்கள்
Updated: Oct 01, 2024 04:56 PM
வேட்டையனில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஞானவேல் சொன்ன தகவல்...
ஞானவேல் இயக்கத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாக இருக்கு. சோலோவாக வரும் வேட்டையன் வசூலில் புது சாதனை படைக்கும்ணு எதிர்பார்க்கப்படுது. இயக்குநர் ஞானவேலிடம் படம் பத்தி கேட்டதற்கு ஸ்வாரசியமா சில விஷயங்கள சொல்லீருக்காரு.
நாம இதுவரைக்கும் பார்த்த என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் படங்கள்ல இருந்து வேட்டையன் வித்தியாசமா இருக்கும். இதுல என்கவுன்ட்டர் செய்யுற அதிகாரிகளோட பின்புலக் கதையை சொல்லி இருக்கோம். என்கவுன்ட்டர் பத்தின அவங்களோட எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பதையும் காட்டியிருக்கோம்ணு ஞானவேல் சொல்லீருக்காரு.
ஜெயிலர் பட ரிலீஸுக்கு பிறகு ரஜினி சார் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிச்சிருக்கு. அதை மனசில வைச்சே இந்த படத்தில சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் வச்சிருக்கோம். அப்டிணு சொல்லீருக்காரு. எது எப்படியோ, ரஜினியை மீண்டும் காக்கிச் சட்டையில் கெத்தாக பார்க்க ரசிகர்கள் காத்துட்டு இருக்காங்க. வேட்டையன் படத்தில வர்ற மனசிலாயோ பாட்டோட லிரிக்கல் வீடியோ வெளியாகி பெரிய அளவில ரீச்சாகிருச்சு.
ஏகேவுடன் மோதப் போவது யார் தெரியுமா?
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில 'குட் பேட் அக்லி' படம் உருவாகிட்டு இருக்கு. அடுத்த வருசம் வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போற இந்தப் படம் பத்தி இப்போ லேட்டஸ்ட் தகவல் ஒண்ணு வெளியாகிருக்கு.அஜித் நடிப்பில பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவாகிட்டு இருக்க 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் மூன்று விதமான தோற்றங்கள்ல நடிச்சிட்டு இருக்காறாம். டைட்டிலுக்கு ஏற்ப அவரின் கேரக்டர் இருக்கும்ணு சொல்லப்படுது.
இந்நிலையில குட் பேட் அக்லியில் அர்ஜுன் தாஸ் வில்லனா நடிச்சிட்டு இருக்கதா சொன்னாங்க. இப்போ, நடிகர் பிரசன்னாவும் இந்தப் படத்தில இணைஞ்சிருக்கதா சொல்றாங்க. பிரசன்னா வில்லனாக நடிக்க இருக்கதா தகவல் வெளியாகிருக்கு.
இதுக்கு எடையில 'விடாமுயற்சி' படத்தோட ஷுட்டிங் முடிஞ்சு போஸ்ட் புரடக்சன் பணிகள் போயிட்டு இருக்கு. மகிழ் திருமேனி இயக்கத்தில உருவாகிருக்க இந்தப் படத்திற்காக நீண்ட காலமாவே ரசிகர்கள் காத்திட்டு இருக்காங்க. டிசம்பர்ல 'விடாமுயற்சி' ரிலீசாகும்ணு சொல்லப்படுது.
தனித் தீவு வாங்கிய நடிகை.. வாயடைத்து போன பாலிவுட்!
கவர்ச்சியில உச்சத்தில் இருக்கும், பல பாலிவுட் நடிகைகள்ல இவரும் ஒருத்தர். சமீபத்தில, இவர் மேல மோசடி வழக்கு கூட பதிஞ்சாங்க. அதிக சம்பளம் வாங்குற தீபிகா படுகோன் போன்றவர்கள் கூட செய்யாத ஒரு விஷயத்தை இந்த நடிகை செஞ்சிருக்காங்க.
சொந்தமாக தீவு வைச்சிருக்க நடிகைன்னு சொன்னதுமே, எல்லாரும் யாரு, ஐஸ்வர்யா ராயா, பிரியங்கா சோப்ராவா இல்ல தீபிகா படுகோனா என்றுதான் நினைச்சிருப்பாங்க. ஆனால் இவங்க யாரும் இல்ல.
இலங்கையை சேர்ந்த ஒரு நடிகை 15 வருசத்துக்கும் மேல பாலிவுட்ல கொடிகட்டி பறந்துட்டு இருக்காங்க. அவர் நடிச்ச மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2 மற்றும் கிக் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கெடச்சது. மேலும், ‘ஹவுஸ்ஃபுல் 3’ இவருக்கு கடைசி வெற்றி படமா அமைஞ்சது.
2012-ல தனக்கு மார்க்கெட் இருக்கும்போதே பல முதலீடுகளை செய்யணும்ணு முடிவு பண்ணி, இலங்கையில் ஒரு தனியார் தீவை சொந்தமாக வாங்கினார். தனது சொந்த ஊரில், தீவை வாங்கிய அந்த நடிகை வேற யாரு ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான். இவரோட டான்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும். மேலும் கவர்ச்சியில பல முன்னணி நடிகைகள மிஞ்சிருவாங்க.. அவர் தான் தனக்கென்று சொந்தமாக தீவு வைச்சிருக்காங்க.