விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன் 2’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வரும் 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.