விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, அந்த கால கட்டத்திலேயே உலகளவில் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.