ராஜமவுலி இயக்க உள்ள மகாபாரதம் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாவதாக அவரது தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது கனவு படமாக மகாபாரதம் கதையை இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக 6 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருந்து நேர்த்தியான ஸ்கிரிபட் அமைத்து கதையை வடிவமைத்து வருகிறார்.