விஜய்சேதுபதி நடித்து கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான ஏஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. ஆறுமுக குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணியும், அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். கடந்த மாதம் 23ம் தேதி வெளியான இப்படம் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.