விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11.11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதையும் படியுங்கள் : யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழா..