தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினார். விஜய் தேவரகொண்டா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபா சமாதியில் வழிபாடு நடத்திய பின் வீடு திரும்பினார். அப்போது தெலங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது மற்றொரு கார் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கார் லேசாக சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்தினர் காயங்களின்றி தப்பினர்.இதையும் பாருங்கள் : விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா..