சூர்யாவின் 46-வது திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த நிலையில், படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டோ கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற 'ரெட்ரோ' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.