சென்னையில் இன்று நடைபெறவிருந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்தனர். விஜய் ஆண்டனி 3.0 என்ற தலைப்பில் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் CONCERT நடைபெறவிருந்த நிலையில், போதுமான அளவு இடவசதி இல்லாததை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.