விஜய் ஆண்டனி நடிக்கும் 'ககன மார்கன்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை அட்டக்கத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்குகிறார்.