விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தை அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியின் மனைவி மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படத்தில் சமுத்திரகனி, மகாநதி சங்கர், பிரிகிடா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.