சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த இருவரின் கூட்டணியில் உருவான திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் படம் உருவாகி உள்ளது.