டிரான் படத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 3வது பாகமான டிரான்: ஏரிஸின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 1982-ம் ஆண்டு வெளியான டிரான் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் தொடர்ச்சியாக 2010-ல் டிரான்: லெகசி வெளியானது. தற்போது 3-வது பாகமாக டிரான்: ஏரிஸ் உருவாகி உள்ளது. ஜோச்சிம் ரோனிங் இயக்கி உள்ள இப்படத்தில் ஜாரெட் லெட்டோ, ஜெப் பிரிட்ஜஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.