நடிகர் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கிய நிலையில், ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.