நடிகை கீர்த்தி சுரேஷ், தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தியிலும் அவர் ஒரு படம் நடித்தார். ஆனால், அந்த படம் பிளாப் ஆனது. தற்போது மீண்டும் தமிழ், தெலுங்கில் அவர் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், கீர்த்தி தன்னை பற்றி வரும் ட்ரோல்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். சினிமாவுக்குள் வந்து 12 வருடம் ஆனாலும் என் பயணம் இப்போது தான் தொடங்கியது போல இருக்கிறது. கடலில் ஒரு துளியை தான் நான் அறிந்து இருக்கிறேன் என நினைக்கிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசமான கேரக்டர்கள் நடிக்க வேண்டும் என தோணுகிறது. நான் நிறைய hate மற்றும் ட்ரோல்களை தாண்டி தான் வந்திருக்கிறேன். சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்களை நான் கண்டுகொள்வது இல்லை. நெகட்டிவிட் என்றால் நான் அதற்குள் போக மாட்டேன். சில விஷயங்கள் மோசமாக இருக்கும். ஆனால், நான் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் என் வேலையை பார்த்துக்கொண்டு போயிடுவேன். அதை தான் இப்போதும் செய்கிறேன்.இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் கூறி இருக்கிறார். இதையும் பாருங்கள் - "மலையாளம் தெரிந்திருந்தால் கேரளாவில் செட்டில் ஆகியிருப்பேன்" ஆண்ட்ரியா ஓபன் ஸ்பீச் | Andrea Speech