அனிருத் இசையில் உருவான தீமா பாடல், யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான தீமா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.