நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நெல்சனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் முத்துகுமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில், கவின் பிச்சைக்காரன் கெட்டப்பில் நடித்துள்ளார். வரும் 31ஆம் தேதி தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. நெல்சன் படங்களைப் போலவே இந்த படமும் டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.