சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்பட கிராமம் சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்கவரான பொன்ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் கொம்புசீவி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கொம்புசீவி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.