விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக உள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படபூஜையின் புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. இயக்குநர் செல்லா அய்யாவு 2 ஆம் பாகத்தையும் இயக்க உள்ள நிலையில், முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா லஷ்மி, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்டோர் மீண்டும் இணைய உள்ளனர். விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.