துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா திரைப்படத்தின் 'கண்மணி நீ' பாடல் வெளியாகியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், வேஃபாரர் பிலிம்ஸ்((wayfarer films)) மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.