தனுஷ் இயக்கி அவரே நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது. இரு வேறு கோணங்களில் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.இதையும் படியுங்கள் : ‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டம் ரன் படத்தின் இயக்குநர் லிங்குசாமி தகவல்