அமீர் இயக்கி, நடிகர்கள் சூரியா, லைலா மற்றும் திரிஷா நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் இணையத்தை கலக்கி வருகிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.