வேட்டையன் படத்தின் இரண்டாவது பாடலாக Hunter Vantaar என்ற பாடலை, படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக மனசிலாயோ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது பாடலாக Hunter Vantaar என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியிருக்கிறார்.